மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பிரதான ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினரின் மேலதிக வாக்குகளால் இந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆதரவாக தமிழரசு கட்சி
இந்த வாக்கெடுப்பில் இருந்து எவரும் விலகியிருக்கவில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.