ஐ.நா பொதுச்சபையின் நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சஜித்தின் கருத்துக்கு : பதிலடி கொடுத்த மஹிந்தானந்த
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தான் மூன்றாவது தடவையாக பங்குபற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றுப்பயணத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், டபிள்யூ.எச்.எம். தர்மசேன மற்றும் கின்ஸ் நெல்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சஜித் பிரேமதாச தடுத்து விட்டார்
எனினும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மசேன மற்றும் நெல்சன் ஆகியோரை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அரச தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அழைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலங்களுக்குள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை நிகழ்வில் தாம் மூன்று தடவைகள் கலந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் : ரணில் விக்ரமசிங்க
சர்வதேச நிகழ்வுகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சர்வதேச நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்; இந்தநிலையில் உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் சமந்தா பவர் ஆகியோருடன் சந்திப்புகளில் அமர்வதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியது போல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக தினசரி கொடுப்பனவு பயண கொடுப்பனவு எதையும் பெறவில்லை என்றும் மஹிந்தானந்த மேலும் தெரிவித்துள்ளார்.