தக்க சமயத்திற்காக காத்திருக்கும் மகிந்த ராஜபக்ச..!
Mahinda Rajapaksa
Sri Lanka
By pavan
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் எழுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் இணைவர்
மேலும், நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் சரியான நேரத்தில் மீண்டும் இணைந்து கொள்வர்.
இப்போதே அவசியமில்லை. சரியான நேரத்தில் இணைவோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்