அரசிற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் மைத்திரிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல்
Srilanka Freedom Party
Mahinda Amaraweera
Maithripala Sirisena
Nimal Siripala De Silva
Sri Lanka
By Sathangani
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மைத்ரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சிறிலங்கா அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருட பூர்த்தி கொண்டாட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் நாட்டின் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி