சுதந்திரக் கட்சியை ஏலம் விடும் மைத்திரி: மகிந்த அமரவீர பகிரங்கம்
Colombo
SLFP
Mahinda Amaraweera
Maithripala Sirisena
By Sathangani
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், விவசாய அமைச்சருமான மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதித் தேவைகளுக்காக இந்தக் கட்சியை பயன்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிக்கு தகுதி இல்லை
கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தபோதே இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியின் நிறைவேற்று சபையில் இணையும் தகுதி இல்லாத காரணத்தினாலும், பதில் செயலாளர் சட்ட நடவடிக்கைகளை அவமதித்துள்ளமையினால் இது குறித்து எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
மரண அறிவித்தல்