ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த மைத்திரி: வலுக்கும் எதிர்ப்பு
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருக்கலாம் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு இன்று(03) கருத்து தெரிவிக்கும் போதெ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகளை பார்வையிட்டதுடன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நலன்களையும் கேட்டறிந்தார்.
இரகசிய வாக்குமூலம்
இந்நிலையில், காவல்துறை மா அதிபரின் இந்த செயற்பாட்டுக்கும் அருட்தந்தை சிறில் காமினி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று (03) மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |