தையிட்டியில் கட்டப்பட்டது பாபர் மசூதியே - மைத்திரியிடம் எடுத்துரைத்த சிவசேனை
"பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள்.
தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி. அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை."
இவ்வாறு சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.
சந்திப்பு
இன்றையதினம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
மூன்று நாட்கள் யாழில் தங்கி இருந்து பல முக்கிய சந்திப்புக்களில் மைத்திரி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தநிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கும், யாழ்ப்பாண மாவட்ட இந்துமத குருமார்கள் மற்றும் இந்துமத அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) காலை இடம்பெற்றது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்து ஆலயங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் கேட்டறிந்து கொண்டதாக சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.
