ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மலையக மக்கள் பாரிய பங்களிப்பு - கந்தையா பாஸ்கரன்
மண்னை ஆள வேண்டிய தமிழ் மக்கள், இன்று மண்ணுக்காக போராடி நிற்பதாகவும் மிக விரைவில் மாற்றம் உருவாகும் எனவும் ஐ.பி.சி. தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில், நேற்று இடம்பெற்ற மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர், தாயக மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பு என்பது அளப்பரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் முன்னேற்றம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ஏராளமான மலையக மக்கள் இன்று கல்வி நிலையிலே முன்னோக்கிச் செல்வதை நினைத்து பெருமையடைகிறேன்.
மலையக இளைஞர், யுவதிகள் தற்போது இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று சிறந்த புத்திஜீவிகளாக மாறியுள்ளனர். இது எம் மக்களை பெருமைப்படுத்தும் விடயமாகும்.
நாங்கள் அனைவரும் இந்த மண்ணுக்கு உரித்தானவர்கள். இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். ஒருநாள் எமது தேசம் விடுதலையடையும். அந்த விடுதலையை சுவாசிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்" என்றார்.









