மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்
மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28) காலமானார்.
ஆனால் இவரின் மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர்.
40,000 கோடி சொத்தை துறந்துவிட்டு புத்த துறவி
புத்தமத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சொத்தை துறந்துவிட்டு புத்த துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது.
கடந்த 20 ஆண்டுகளாக சிரிபான்யோ தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.தியானம் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். சிரிபன்யோ சுமார் 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இலங்கை(sri lanka) யாழ்ப்பாணத்தை(jaffna) சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் குடியேறினர்.
மலேசிய தொழிலதிபர்
அப்போதுதான் ஏகே கடந்த 1938-ம் ஆண்டு பிறந்தார். மலேசியாவின் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கி அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார்.
மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு இவர் சொந்தக்காரர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |