மாலைதீவு நாடாளுமன்ற தேர்தல் : இந்தியா,இலங்கை ,மலேசியாவில் வைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகள்

Sri Lanka Malaysia India Maldives Election
By Sumithiran Mar 18, 2024 04:32 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

மாலைதீவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் வைக்கப்படவுள்ளன.

சுமார் 11,000 மாலைதீவியர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளை இடமாற்றம் செய்யுமாறு மறுபதிவு கோரிக்கைகளை சமர்ப்பித்ததை அடுத்து, நாட்டின் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

திருவனந்தபுரம்,கொழும்பு ,கோலாலம்பூரில்

ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான ஆறு நாள் கால அவகாசம் சனிக்கிழமையுடன் காலாவதியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தல் : இந்தியா,இலங்கை ,மலேசியாவில் வைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகள் | Maldives Elections Placed In India Sri Lanka

இதன்படி வாக்குப்பெட்டிகள், கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம், இலங்கையின் கொழும்பு மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் ஆகிய மூன்று இடங்களிலும் குறைந்தது 150 பேர் வாக்களிக்க மறுபதிவு செய்த பிறகு வைக்கப்படும் என்று உயர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

200 ஆண்டுகளுக்கு பின்னர் புடின் படைத்த சாதனை

200 ஆண்டுகளுக்கு பின்னர் புடின் படைத்த சாதனை

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் 

“முன்பு போல், இலங்கையிலும் மலேசியாவிலும் போதுமான மக்கள் பதிவுசெய்துள்ளனர். இந்தியாவில் திருவனந்தபுரத்தில் 150 பேர் பதிவு செய்திருப்பதால், அங்கு வாக்குப்பெட்டியை அமைக்க முடிவு செய்துள்ளோம்,” என்று தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் ஹசன் ஜகாரியாவை மேற்கோள் காட்டி adadhu.com இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தல் : இந்தியா,இலங்கை ,மலேசியாவில் வைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகள் | Maldives Elections Placed In India Sri Lanka

மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம்

மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம்

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மீண்டும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய ஜகாரியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்தில் வாக்களிப்பு நடத்தப்படாது என்று கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023