இந்திய படையை வெளியேற்றுங்கள் : முறைப்படி அறிவித்தார் மாலைதீவு அதிபர்
India
Maldives
Indian Army
By Sumithiran
தனது நாட்டிலுள்ள இந்தியபடையை வெளியேற்றுமாறு இந்தியாவிடம் முறைப்படி அறிவித்துள்ளார் மாலைதீவின் புதிய அதிபர் முயிஸ்.
நேற்றுமுன்தினம் (17) புதிதாக பதவியேற்ற அவர், இந்தியாவிடம் அவர்களது இராணுவத்தை திரும்பப் பெறுமாறு “முறைப்படி கோரினார்” என்று மாலைதீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முறைப்படி கோரினார்
புதிதாக பதவியேற்ற அதிபரை இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்தார்.
அப்போது அதிபர் முயிஸ், மாலை தீவிலிருந்து இந்தி இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் “முறைப்படி கோரினார்” என்று மாலைதீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்