தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை : பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள்

Kilinochchi Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Independent Writer Aug 23, 2024 07:50 AM GMT
Report

தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்களை விசேடமாக அழைத்து சிகிச்சையளிக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட வைத்திய நிபுணர்கள் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு விசேடமாக பார்வையிடும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் (22.08.2024) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 97 வயதில் சாதித்த பெண்

இலங்கையில் 97 வயதில் சாதித்த பெண்

கிளிநொச்சி வைத்தியசாலை

தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்கள் விசேட வைத்திய நிபுணரிடம் காண்பிப்பதற்காக இவ்வாறு வரிசை நடைமுறையை பின்பற்றாது அழைக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை : பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள் | Malpractice In Govt Hospital Rural People Affected

சிகிச்சைக்காக தூர இடங்களிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற ஏழைகள், போக்குவரத்து உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வெளிநோயாளர் பிரிவில் நீண்ட வரிசையில் நின்ற பின், கண் சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பப்படுகின்றனர். மீண்டும் அங்கு தொடர் இலக்கங்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், குறித்த வரிசை நடைமுறையை பின்பற்றாது, தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்தவர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றனர். அவர்களிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வைத்தியர்கள் பார்வையிடுகின்றனர்.

விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம்

விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம்

பணம் சம்பாதிக்கும் சுகாதார துறை

சிகிச்சைக்காக சென்ற ஏழை நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தூர இடங்களிலிருந்து செல்லும் ஏழை நோயாளர்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றனர்.

தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை : பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள் | Malpractice In Govt Hospital Rural People Affected

பணம் கொடுத்து சிகிச்சை பெறும் மக்களிற்கான சோதனையை அரச செலவில் மேற்கொண்டு பணம் சம்பாதிக்கும் சுகாதார துறையினர், முறையான வரிசை நடைமுறையையேனும் பின்பற்ற வேண்டும்.

இந்த நிலை கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதனால் அப்பாவி ஏழைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் மருத்துவ துறையில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு அரச செலவில் இலாபமீட்டும் வைத்தியர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியம் வழங்கும் அரசு....! எழுந்துள்ள குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியம் வழங்கும் அரசு....! எழுந்துள்ள குற்றச்சாட்டு

சத்திர சிகிச்சைகள்

வசதி வாய்ப்புக்களுடன் தனியார் வைத்தியசாலைகளை நாடுபவர்களுக்கு அங்கேயே பரிசோதனையும், சிகிச்சையும் இடம்பெற வேண்டும். ஏழைகளுக்காக வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் செயற்பாடு பல பகுதிகளிலும் நடைபெறுகிறது.

தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை : பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள் | Malpractice In Govt Hospital Rural People Affected

பணத்தினைப் பெற்று அரச செலவில் சத்திர சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் இலவச மருத்துவம் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாதிருக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இலவச சிகிச்சைக்காக செல்லும் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். உரிய வரிசை நடைமுறைகள் பின்பற்றப்படுவதை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதுடன், விசேட வைத்திய நிபுனர்களை சந்திக்க தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினால் சிபாரிசு செய்யப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதனால், பின் தங்கிய பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் இலவச மருத்துவ சேவையை முழுமையாகவும், உரிய முறையிலும், தாமதமின்றியும் பெற்றுக் கொள்ளும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011