யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு

Jaffna Northern Province of Sri Lanka Drugs Medicines
By Independent Writer Jul 23, 2024 09:15 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்று போதைமருந்து கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்து அங்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பிரகாரம் மருந்துகள் மற்றும் உணவுப் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கிய குழுவினர் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அங்கு அவ்வாறான பொருட்கள் எவையும் இல்லாத நிலையில் சோதனையிடுவதற்கு வந்த அதிகாரிகள் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

 

மருந்தகத்தில் சோதனை

குறித்த மருந்தக உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் இறுதிக் கிரியைகளில் பங்கெடுத்திருந்தார். அத்துடன் நேற்று முன்தினம் (22) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் மரணச் சடங்கு இடம்பெறுகின்ற காரணத்திலும் மருந்தகத்தை திறக்காத நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கு வந்த அதிகாரிகளது கடமையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் குறித்த மருந்தக உரிமையாளர் தனது மருந்தகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்திருந்தார். ஆனால் தேடுதலின்போது போதைப் பொருள் எவையும் கிடைக்காத நிலை காணப்பட்டுள்ளது.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு | Malpractice In The Medical Field In Jaffna

மருந்தகத்தின் உள்ளே சோதனையிடுவதற்கு எந்த எந்த அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்துரைக்கப்பட்ட ஏழு அதிகாரிகள் மாத்திரமே மருந்தகத்தின் உள்ளே சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பது வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு 

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மருந்தகத்தின் உள்ளே சோதனை செய்வதற்கான அதிகாரம் இல்லை. ஆனால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது சுகாதார பரிசோதகர் ஒருவரும் உள்ளே சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக மருந்தக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு | Malpractice In The Medical Field In Jaffna

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது முறைகேடு தொடர்பில் குறித்த மருந்தக உரிமையாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு (Colombo) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பலாலி வீதி கந்தர்மடம் சந்திக்கு அருகாமையில் மூன்று மருந்தகங்கள் உள்ளன. அதில் ஒரு மருந்தகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி சட்டத்திற்கு புறம்பானது என பாதிக்கப்பட்ட மருந்தக உரிமையாளரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்திற்கு அமைவாக வைத்தியசாலைக்கு அருகில் இல்லாத மருந்தகங்கள் இரண்டுக்கு இடையே சுமார் 250 மீற்றர்கள் தூரம் பேணப்பட வேண்டும் என்ற நியதி காணப்படுகிறது.

ஆசிரியர்களின் சம்பள உயர்வு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஆசிரியர்களின் சம்பள உயர்வு : வெளியான மகிழ்ச்சி தகவல்

குறைவான தூரம் 

ஆனால் புதிதாக அனுமதி வழங்கப்பட்ட மருந்தகத்துக்கும் ஏற்கனவே உள்ள மருந்தகத்துக்கும் இடையேயான தூரமானது 200 மீற்றருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. தூரத்தை அளவிடுவதற்கு கூகுள் வரைபடம் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு | Malpractice In The Medical Field In Jaffna

இரண்டு மருந்தகங்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரித்து காண்பிப்பதற்காக பிரதான வீதியையோ, கூகுள் வரைபடத்தினையோ கருத்தில் கொள்ளாது, மாநகர சபையில் பதிவில் இல்லாத சிறிய வீதிக்கு புதிய பெயரை சூட்டி அந்த தூரத்தை உருட்டி அளக்கும் வீல் அளவீட்டு முறை மூலம் அளவிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் செய்த முறைப்பாட்டுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கலாம் என மருந்தக உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட்டி வீதம் தொடர்பில் வெளியான தகவல்

வட்டி வீதம் தொடர்பில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 23 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025