ஜனாதிபதி செயலகம் அருகே உயிர் மாய்க்க முற்பட்ட இளைஞரால் பரபரப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (06) கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி தன்னுடை உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த நபர் மிரட்டியுள்ளார்.
காப்பாற்றும் முயற்சி
அத்தோடு, குறித்த கம்பத்தில் இருந்து தான் கீழே விழப்போவதாகவும், உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அங்கிருந்த மக்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சமிக்ஞை விளக்கு
இருப்பினும், அவர் கீழே இறங்காமல் தொடர்ந்தும் சமிக்ஞை விளக்கு கம்பத்திலேயே அமர்ந்திருந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டுள்ளனர்.
இதையடுத்து, அவரை சம்பவ இடத்திலிருந்து காவல்துறையினர் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
