படையினருக்கு ஒத்த உடையை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றவர் கைது
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lanka
By Sumithiran
சிறிலங்காபாதுகாப்பு படையினருக்கு நிகரான உடை
கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது சிறிலங்காபாதுகாப்பு படையினருக்கு நிகரான உடையை அணிந்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் ஆகிய இரண்டு படைப்பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையிலான உடையை அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
ஜூன் 09 ஆம் திகதி கோட்டையில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இந்த ஆடையை அணிந்திருந்தார்.
பாதுகாப்பு படையினரின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்து சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரை கொழும்பு கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி