கொக்கட்டிச்சோலையில் 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!
கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு கசிப்பு கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (10-07-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வேனுஜன் தலைமையில் காவல்துறை கொஸ்தாப்பரகளான யசோதரன், ஹேமச்சந்திர மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவ தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |