இளைஞருக்கு வந்த குறுந்தகவலால் மாறிய வாழ்க்கை -இறுதியில் நடந்த விபரீதம்
அவுஸ்ரேலியாவில் தவறுதலாக இளைஞரின் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவுஸ்ரேலியாவை சேர்ந்த அப்தெல் காடியா எனும் இளைஞருக்கு 760,000 அவுஸ்ரேலிய டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4.2 கோடி ரூபாய்) கிரெடிட் ஆகியுள்ளது.
இதனால் ஆச்சரியமடைந்த அவர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த பணத்தை கொண்டு எப்படி சொகுசாக வாழலாம் என சிந்திக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த பணத்தை கொண்டு தங்க நாணயங்கள், நகைகள், தங்க கட்டிகள் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.மேலும், ஏடிஎம் மூலமாக இலட்சக்கணக்கான பணத்தை எடுத்த அவர் ஷொப்பிங் மாலுக்குள் சென்று தனக்கு வேண்டிய உடைகள், சப்பாத்து உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்திருக்கிறார்.
வங்கி அதிகாரியின் தவறால் ஏற்பட்ட சிக்கல்
இதனிடையே அவுஸ்ரேலியாவை சேர்ந்த தாரா தோர்ன் - கோரி தம்பதி வங்கியில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய தொகையை எதிர்பார்த்து இருந்திருக்கின்றனர். வீடு வாங்கும் கனவில் இருந்த இருவரும் அருகில் உள்ள வங்கியில் கடன் பெற்றிருக்கிறார்கள். அப்போது, வங்கி அதிகாரி ஒருவர் இந்த தம்பதிக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக காடியாவுக்கு அனுப்பியதே இத்தனை சிக்கலுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வங்கி இலக்கத்தை டிராக் செய்த அதிகாரிகள் எளிதில் காடியாவை கண்டுபிடித்திருக்கின்றனர்.
எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லை
உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட காடியா, தனது கணக்கில் அந்த பணம் இருந்ததால் தான் செலவு செய்ததாகவும் எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அந்த பணத்தை செலவழித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
