சுற்றுலா விடுதியில் மர்மமாக உயிரிழந்து கிடந்த நபர்! தொடரும் விசாரணை
ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் ஒன்றின் அறையில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரியான்சி பிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, நேற்று (05) மதியம் தனது நண்பருடன் குறித்த சுற்றுலா விடுதியில் மது அருந்திவிட்டு கீழே விழுந்து கிடந்துள்ளார்.
உயிரிழப்பு
பின்னர், கீழே விழுந்த நபரை மீண்டும் அறைக்கு கூடிச் சென்ற நிலையில், இன்று காலை குறித்த நபர் வெளியில் வரவில்லை என்பதால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் மேற்படி விடுதிக்கு வந்து அந்த நபர் அறைக்குள் உயிரிழந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் உடல் தொடர்பான நீதவான் விசாரணை (06) மதியம் நடைபெற்றதோடு, சடலம் ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து காவல்துறையினர் சடலத்தை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
