ஒரே கடையில் ஒரே நாளில் நான்கு முறை திருட்டு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்
Sri Lanka Police
Crime
By pavan
மத்துகம - யட்டதொலவத்த பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வந்த நபரொருவர் அங்குள்ள பொருட்களை திருடி சென்றுள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்த பிஸ்கட், பால்மா போன்ற பொருட்களை திருடி தனது உடமையில் மறைத்து வைத்து சென்றுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் 4 மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட நபர் நான்கு முறை வந்து பொருட்களை திருடியுள்ளதோடு, இரண்டு முறை சிறு குழந்தையுடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் மத்துகம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்