யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு! புலன் விசாரணையில் அம்பலமான பின்னணி

Jaffna Crime Death
By pavan Oct 14, 2022 08:22 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு  

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந் (மிராஜ்) என அழைக்கப்படும் 35 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மது போதையில் நிகழ்ந்த சம்பவம்  

யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு! புலன் விசாரணையில் அம்பலமான பின்னணி | Man Was Recovered As A Dead Body In Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிதாக கட்டப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் வேலை செய்யும் குழு ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அருகில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் மது போதையில் விடுதியில் குழப்பத்தினை ஏற்படுத்தி , விடுதி பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி தாம் வேலை செய்யும் புதிய கட்டடத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் (14) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விடுதி பணியாளர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு  

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் உள்ள கட்டடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உயிரிழப்பு தொடர்பில் காவல்துறையினர் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று (14) காலை சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

10 பேர் விளக்கமறியலில்

யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு! புலன் விசாரணையில் அம்பலமான பின்னணி | Man Was Recovered As A Dead Body In Jaffna

திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் காவல்துறை விசாரணையில் உள்ளனர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017