சூறாவளியால் 300 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நபர் : வைரலாகும் காணொளி
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியில் வீசிய கடுமையான புயலின்போது தகரத்தைப் பிடித்துக் கொண்டிருந்த நபர் சுமார் 300 மீட்டர் உயரம் வரை தூக்கி வீசப்பட்டார்.
குறித்த நபர் புயலில் இருந்து தப்பிக்க திருமண மண்டபத்தில் இருந்த தகரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றினால் தகரத்துடன் அவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டார்.
கைகள் மற்றும் கால்களில் எலும்பு முறிவு
சுமார் 300 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டதால் அவருக்கு கைகள் மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
A man was sent flying into the air along with a tin roof by a storm in Uttar Pradesh, India. pic.twitter.com/mPm2nFReDU
— The Koshur Doc (@TheKoshurDoc) May 14, 2026
இதுதொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதேவேளை பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |