இன்று அதிகாலை மானிப்பாயில் வீடு புகுந்து தாக்குதல்..! தீக்கிரையாக்கப்பட்ட உந்துருளி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
தாக்குதல்
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று(28) அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற உந்துருளிக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் மாறாக பாரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உந்துருளி முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறன்றது.
காவல்துறையினர் விசாரணை
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி