யாழ் - மன்னார் பிரதான வீதியில் விபத்து! ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி - பூநகரி, தெளிகரை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை குறித்த விபத்தில் சிக்கிய மாடுகள் மூன்றும் பலியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னார் - யாழ்ப்பாண பிரதான வீதியின் 4ம் கட்டை தெளிகரை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
வீதியில் தரித்திருந்த மாடுகளுடன் மோதிய வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் சிக்கிய வகனம் கடுமையாக சேதமடைந்ததுடன், வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீன் ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Tags : #Mannar #Death #Sri Lanka

