மன்னார் சிறுமி கொலை விவகாரம்: தப்பியோடிய சிறைக்கைதி
Mannar
Vavuniya
Sri Lanka Police Investigation
Prison
By Laksi
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தேடும் பணி
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை (03) வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி