இந்தியாவால் அகழப்படும் மன்னார் தீவு! வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல்
மன்னார் தீவு தோண்டப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படப்போவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான நிலம்
அந்நிகழ்ச்சியில் மேலும் கூறிய அவர், “ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இல்மனைட் அகழ்விற்காக மன்னார் தீவை இந்திய அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது.அத்தோடு மேலும் பல திட்டங்களிலும் கைச்சாத்திட்டுள்ளது.
மன்னார் தீவு கடலுடன் நீண்ட ஒரு நிலப்பரப்பு காணப்படுகிறது.அதில் கடல் பகுதியில் இருந்து கரையை நோக்கி 100 மீட்டர் தோண்டப்படவுள்ளதோடு அதன் ஆழம் 6.5 மீட்டர்களாகும்.
அவ்வாறு தோண்டினால் மன்னாரில் வாழும் மக்களுக்கான நிலம் குறைவடைந்து குடிக்க நீரும் அற்றுப்போகும் நிலையில் மக்கள் மன்னாரை விட்டு வெளியேரும் சூழல் ஏற்படும்.
கனிம அகழ்வு
அப்போது மன்னார் தீவு இந்தியாவுக்கு முழுமையாக தாரைவார்க்கப்படும். பின்னர் இந்தியா ராமர் பாலம், அல்லது சேது சமுத்திரப் பாலம், இது ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளதாகும்.இப்பாலம் மீளமைக்கப்படவுள்ளது.
அத்தோடு இலங்கை கடற்பகுதியில் அண்மைத்து காணப்படும் கடல் மலையில் afanasy nikitin கனிமங்கள் நிறைந்துள்ளன.
இது மீள்சார்ஜ் செய்யும் பெட்டரிகளுக்கு பயன்படுத்தப்படும் கனிமமாகும்.இவை கொங்கோ, ஆபிரிக்கா நாடுகளிலே காணப்படுகிறது.
இந்த seamount இலங்கையில் இருந்து 650 மையில் அதாவது 1050 கிலோ மீட்டராகும்.மேலும் இந்தியாவில் இருந்து 840 மையில் அதாவது 1350 கிலோ மீட்டராகும்.குறித்த கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கு வழங்கப்பட்டடுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
