மன்னாரில் உடைக்கப்பட்ட கப்பலேந்தி மாதா ஆலயம் - தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka Police
Mannar
By Mohankumar
மன்னார் கரிசல் கிராமத்தில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கதவுகள் உடைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று(9) இரவு இடம் பெற்றுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும் நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில்,
“இத் திருட்டு சம்பவத்தின்போது உண்டியல் உட்பட நற்கருணை கிண்ணம் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளது." என்றனர்.
காவல்துறை விசாரணை
[Q2IWHஸ
சம்பவம் குறித்து மன்னார் காவல் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்றைய தினம் (10) வவுனியா தடயவியல் காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற் கொண்டது.
இத் திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்