மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு
மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி V.S நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு விசாரணையானது நேற்றைய தினம்(11) மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு துறையினரால் (CID) சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் முன்னிலையான சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்தார்.
திருக்கேதீஸ்வர மனித புதை குழி
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டிருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையினால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார்.
அதன் அடைப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |