மனோ கணேசன் பிரதமர் ரணிலுக்கு அவசர கடிதம்!
நிலங்களை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்குமாறு அவர் குறித்த கடிதத்தில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உணவு தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு
உணவு தட்டுப்பாட்டால் ஏற்படும் இறப்புக்களை தவிர்ப்பதற்கு குறித்த நிலங்களை பகிர்ந்தளிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காணிகள் ஊடாக அவர்கள் விவசாயத்தை மேற்கொள்வதற்கு வழியேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதன் ஊடாக எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை தடுக்க முடியும் என்பதுடன், மலையக மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
