மீண்டும் விளக்கமறியலுக்கு செல்லும் மனுஷவின் சகோதரர்
நிதி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தில் தொழில் வழங்குவதாகக் கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த 28ஆம் திகதி திசர நாணயக்காரவை பிபில பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
இந்த நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்னும் கிடைக்கப்பெறுவதுடன் அது தொடர்பான சாட்சியங்களும் இந்த நாட்களில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என புலனாய்வு குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |