இருபதாயிரம் அரசு ஊழியர்கள் இவ்வருடத்தில் ஒரேயடியாக ஓய்வு
இருபதாயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு
இந்த வருட இறுதிக்குள் இருபதாயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற அரசின் முடிவின்படி, ஒரேயடியாக அரசுப் பணியில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர்.
வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் தவிர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயது பூர்த்தியாவதற்கான சுற்றறிக்கையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
திருத்தங்கள் அமைச்சரவையில்
அதற்கான திருத்தங்களை அமைச்சரவையில் கொண்டு வருவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொறியாளர்கள் 63 வயதில் ஓய்வு பெறுவர் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் நாடாளுமன்றில் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அரச சேவையில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.