யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக தெரிவிற்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது
Jaffna
By Pakirathan
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகமானது ஒவ்வொரு முறையும் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுகிறது.
அந்தவகையில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றையதினம் இடம்பெற்று வருகிறது.
இந்த தேர்தலானது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் இடம்பெறுகின்றன.





