முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு (Mervyn Silva) எதிரான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, வழக்கை செப்டம்பர் வரை ஒத்திவைத்து கொழும்பு (Colombo) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
[RGTEFUM ]
ஊழல் மோசடி
இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (28) கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
