குருணாகல் - புத்தளம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து... நால்வர் படுகாயம்
குருணாகல் (Kurunegala) - புத்தளம் (Puttalam) வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (27) பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
அநுராதபுரத்திலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
