வௌ்ளவத்தையில் சிக்கிய ஆபத்தான நபர்
வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான 'வெலியோய பிரியந்த' மற்றும் 'SF ஜகத்' ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்த ஐஸ் போதைப்பொருள் தொகையின் பெறுமதி 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள்
பம்பலப்பிட்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 2 தராசுகள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |