மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்)

Sri Lanka Police Ampara Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Death
By Shadhu Shanker Dec 22, 2023 07:00 AM GMT
Report

மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  காவல் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வியாழக்கிழமை(21) மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்) | Mathrasa Boy Death 14 Days Remand Supervisor Woman

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மரணமடைந்த சிறுவனின் தந்தை சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் காவல்துறையினர் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல்! இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள கடும் நடவடிக்கை

துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல்! இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள கடும் நடவடிக்கை

பின்னணி

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்) | Mathrasa Boy Death 14 Days Remand Supervisor Woman

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

மேற்பார்வையாளர் கைது

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் குறித்த மரணம் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்) | Mathrasa Boy Death 14 Days Remand Supervisor Woman

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம காவல் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான உப காவல்துறை பரிசோதகர் எஸ்.ஜனகீதன் உள்ளிட்ட காவல்துறை குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! ட்ரூடோ அரசாங்கத்தின் நிம்மதியளிக்கும் செய்தி

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! ட்ரூடோ அரசாங்கத்தின் நிம்மதியளிக்கும் செய்தி

நீதியான விசாரணை

இவ்வாறு கைதான சந்தேக நபர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மத்ரஸா சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வை பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படங்கள்) | Mathrasa Boy Death 14 Days Remand Supervisor Woman

இந்நிலையில் குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் காவல்துறையினர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நாங்கள் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026