தமிழர் தாயகத்தில் மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Vanan
a year ago
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை, தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில்,தமிழர் தாயகத்தில் மாவீரர்நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
சிரமதானப் பணி
தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.








ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 14 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்