தமிழ் இனத்தின் ஒரு மோசமான தலைமை விடைபெறுகின்றது இன்று....
பாரம்பரியமான தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை தெரிவாகிவிட்ட நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று விடைபெற்றுச் செல்கிறார்.
தமிழின வரலாற்றில் அந்த இனம் கண்ட மிக மோசமான ஒரு தலைவர் என்றால் அது மாவை சேனாதிராஜாதான் என்பதில் சந்தேகம் இல்லை.
சுமார் 24 வருடங்களாக தமிழரசுக் கட்சியின் தாலைமைப் பதவி என்ற சக்திவாய்ந்த பதவியை வைத்துக்கொண்டு, எதுவுமே செய்யாமல், யாரையும் எதுவும் செய்யவிடாமல் கவனமாக அந்தப் பதவியை அடைகாத்த ஒருவராகவே மாவையை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கின்றது.
தனது பதவிக்காலத்தில் ஒரு துரும்மைக்கூட முன்நகர்த்தாமல், பெறுபேறுகள், சாதனைகள் என்று எதுவுமே இல்லாமல், ஒரு மோசமான உதாரணமாக வரலாற்றில் தனது பெயரைப் பதிவுசெய்துவிட்டு தோற்றுப் போன ஒரு தலைவராகவே அவர் விடைபெற்றுச் செல்கிறார்.
‘யுத்தத்தில் சிறிலங்கா படையினர் மனித உரிமைகளை மீறியது போல் புலிகளும் மனித உரிமைகளை மீறியுள்ளனர்.
படையினர் விசாரிக்கப்படும் போது விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்ற கருத்தினை தமிழசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் சார்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிட்டு சிங்கள உறுப்பினர்களை குளிர வைத்தபோது, கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பிராகவும் இருந்த மாவை வாயே திறக்கவில்லை.
அது கட்சியின் நிலைப்பாடு என்பதை மௌனமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
2021 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் வரையப்பட்ட கடிதத்தில் ‘சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகள் இரு சாராரும் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான சுமந்திரனும் சாணக்கியனும் கையொப்பமிட்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இருவரது அந்த நிலைப்பாட்டை வாய் மூடி மௌனமாகவே ஏற்றிருந்தார் அக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா.
‘யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது ஒரு இனச்சுத்திகரிப்பு என்றும், அதற்காக தமிழர்கள் வெட்கித் தலைகுனிந்து முஸ்லிங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் பகிரங்க அறைகூவல்விடுத்தபோது, அதற்கு எந்தவித மாற்றுக்கருத்தும் கூறாமல் மெளனமாக அங்கீகாரம் வழங்கி ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர்தான் மாவை.
அதே வேளை கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படை, ஜிகாத் கும்பல், ஒசாமா கும்பல் என்பன தமிழர்களை கொத்து கொத்தாக வேட்டையாடியமை, பல தமிழ் கிராமங்களை தமிழர்களை அழித்தும் மிரட்டியும் ஆக்கிரமித்தமை பற்றி மாவையோ அல்லது அவர் தலைமைதாங்கிய தமிழசுக் கட்சியோ வாயே திறக்கவில்லை .
கல்முனை வடக்கு உப செயலகத்தை முழுமையான செயலகமாக்கக் கடிய வாய்ப்பினை தமிழரசுக் கட்சி மறைமுகமாகக் கைவிட்டதும் மாவை தலைவராக இருந்த காலப்பகுதியில்தான்.
அகிம்சை ரீதியாக 30 ஆண்டுகள் தந்தை செல்வா தலைமையில் ஈழத்தமிழர்கள் உரிமைக்காகப் போராடினர். அப்போராட்டத்தினை மதித்து சிங்கள ஆட்சியாளர்கள் தீர்வு வழங்காமல் ஏமாற்றினர். வன்முறையாக ஒடுக்கினர். அந்த அறப்போராட்டம் தோல்வியடைந்ததால் தமிழ் இளைஞர்கள் வேறு வழியில்லாமல் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.
அதிலும் விடுதலைப் புலிகள் சோரம் போகாமல் இறுதி வரை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் போராடினர். தமிழசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் நேர்காணலின் போது ‘விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியது பிழை’ என்று குறிப்பிட்டார். சுமந்திரனின் கருத்தை வழமைபோலவே மௌனமாக ஏற்றுக்கொண்டிருந்தார் தலைவர் மாவை சேனாதிராஜா.
கட்சியின் பல அங்கதவர்கள் தமிழ் தேசிய விரோத நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அமைதிகாத்தது மாத்திரமல்ல, அவர்களின் அந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதனையும் அவர் எடுக்கவில்லை என்பதும்- மாவை தமிழரசுக்கட்சியின் ஒரு பலவீனமான தலைவராகவே இருந்து வந்திருந்தார் என்பதை வெளிக்காண்பிப்பதாகவே இருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மோசமான தலைவர் என்ற பதிவுடன் இன்று விடைபெற்றுச் செல்கின்றார் மாவை தேனாதிராஜா.
ஒரு இனத்தின் தலைவர், ஒரு இனத்தின் அரசியல் கட்சியின் தலைவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மாவை சேனாதிராஜா என்கின்ற அரசியல்வாதி ஒரு சிறந்த ‘பின்உதாரணம்’.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |