எழுச்சிக் கோலம் பூண்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் : தயார் நிலையில் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளுக்கான பிரதான நிகழ்வுகள் வழமைபோல இன்று மாலை இடம்பெறவுள்ள நிலையில் அதற்குரிய தயார்ப்படுத்தல் ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பின் கடும் கெடுபிடிகள் மற்றும் தடை உத்தரவுகளுக்கு மத்தியில் இந்த தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன
முள்ளியவளை
அந்தவகையில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தின் 592 ஆவது படைப்பிரிவு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் துயிலும் இல்லத்துக்கு அருகாக உள்ள இராணுவத்தால் அபகரிக்கப்படாத சிறிய பகுதியில் பாரிய இட நெருக்கடிக்கு மத்தியில் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வன்னிவிளாங்குளம்
இதேவேளை வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எல்லங்குளம்
யாழ்ப்பாணம் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லமும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகியுள்ளது.
எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்ற போதிலும் அருகிலுள்ள காணி ஒன்றில் சுடர் ஏற்றி நினைவேந்தல் செய்ய ஏற்பாடாகியுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு கடற்கரையில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |