நிலக்கரி பற்றாக்குறை: நடைமுறைக்கு வரவுள்ள நீண்ட நேர மின்வெட்டு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கைக்குத் தேவையான நிலக்கரி கொள்வனவு உரிய முறையில் நடைபெறாது போனால் அடுத்த ஆண்டில் நீண்ட நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிலக்கரி கொள்வனவு
மேலும்..தற்போதைக்கு கையிருப்பில் இருக்கும் நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள்ளாக தீர்ந்து விடும் எனவும்
அதற்குப்பின்னரான பயன்பாட்டுக்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்றும் இல்லாது போனால் அடுத்த ஆண்டில் நீண்ட நேர மின்வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.
600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
எதிர்வரும் செப்டெம்பர் தொடக்கம் அடுத்த ஆண்டின் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் வெளியாகவுள்ள அறிவிப்பு
அதனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

