Golden Boot விருதை வென்று இமாலய சாதனை படைத்த எம்பாப்பே
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார்.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் பிரான்ஸின் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) தங்கக் காலணி (Golden Boot) விருதை வென்றுள்ளார்.
தங்கப் பாதணி விருதைத் தன்வசப்படுத்தியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக மகா சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.
கோல்டன் பூட்
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தபோது லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், எம்பாப்பே தனது இரண்டாவது 'கோல்டன் பூட்' விருதை வென்றார்.

உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், மெஸ்ஸியை (21 கோல்) முந்தி, 22 கோல்களுடன் எம்பாப்பே இப்போது முதலிடத்தில் உள்ளார்.
ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பிறகு, ஒரே உலகக் கோப்பை தொடரில் 10 கோல்களைத் தொட்ட முதல் வீரர் எம்பாப்பே தான்.
கோல்டன் பால்
ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோத்ரி, தொடரின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை வென்றார்.

அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு 'சில்வர் பால்' விருதும், எம்பாப்பேவுக்கு 'வெண்கல பால்' விருதும் வழங்கப்பட்டது.
ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் பின்கள வீரர் பாவ் கியூபார்சி, 'சிறந்த இளம் வீரர்' விருதைத் தட்டிச் சென்றார்.
கோல் அடிக்க விடாமல் க்ளீன் ஷீட்
ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன், சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் க்ளோவ்' விருதை வென்றார்.

இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில், பெல்ஜியத்திற்கு எதிரான ஒரே ஒரு கோலைத் தவிர, மற்ற 7 போட்டிகளிலும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் 'க்ளீன் ஷீட்' தக்கவைத்து மிரட்டினார்.
அதிக கோல் அடித்தவர்கள்
2026 உலகக் கோப்பை அதிக கோல் அடித்தவர்கள்: 10 கோல்கள்: கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்)

8 கோல்கள்: லயனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) 7 கோல்கள்: ஜூட் பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து), எர்லிங் ஹாலண்ட் (நார்வே)
6 கோல்கள் : உஸ்மான் டெம்பேலே (பிரான்ஸ்), ஹாரி கேன் (இங்கிலாந்து) 5 கோல்கள்: மிக்கேல் ஓயர்சபால் (ஸ்பெயின்)
4 கோல்கள்: வினீசியஸ் ஜூனியர் (பிரேசில்), ஜூலியன் குயினோனெஸ் (மெக்சிகோ), இஸ்மாயிலா சார் (செனகல்)
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்