ரவிகரனை எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினர் என விளித்த அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான (Sri Lanka) அவுஸ்திரேலிய (Australia) துணை உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் (Lalita Kapur ) மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது முல்லைத்தீவு (Mullaitivu) - கள்ளப்பாட்டிலுள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நேற்று (02.10.2024) இடம்பெற்றுள்ளது.
துணைத்தூதுவர்
இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் லலிதா கபூர் ரவிகரனை எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினர் என விளித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பாக வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போட்டியிடுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த சந்திப்பில் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய தீர்வு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் நிலமைகள், தமிழர்களின் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு, தமிழர் பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |