பரபரப்பான நிலையில் இலங்கை! நாளை தீர்மானம் மிக்க கூட்டம்
நாளை தீர்மானம் மிக்க கூட்டம்
இலங்கையின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானம் மிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
பதில் அரச தலைவர் ஒருவரை நியமித்தல் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பல இடம்பெற்ற ரகசிய கலந்துரையாடல்கள்
இதேவேளை, இன்றைய தினம் பல கட்சிகள் ரகசிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் தலைமையிலும் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியும் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
