சைவசமயிகளின் தலைவராக தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தேர்வு
வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை ஏகமனதாக சைவசமயிகளின் தலைவராக முன்மொழிந்து ஏற்றுக்கொண்டதுடன் அதனை சைவசமயிகளிடமும் இந்து கலாசார திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அரச உயர் மட்டத்திற்கும் எடுத்து செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது
இன்றைய கூட்டம் தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அருளாட்சி வகிக்க அகிலாணடேசுவரர் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா திருக்கோணேசுவர தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன் நயினை நாகபூசணி தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன் இலண்டன் கனகதுர்க்கை அறங்காவலர் மருத்துவர் பரமநாதன் அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார் அகில இலங்கைச் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம் வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன் சிவ சகோதரர்கள் சிவதொண்டர் சிவமங்கயர் மாவட்ப இணைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தவத்திரு அகத்தியர் அடிகளார்
யாழ்ப்பாணத்தை தலைமையாக் கொண்ட சிவகுரு ஆதீனம் , சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம் மலையகத்தை தலைமையாக கொண்ட சிவசகோதரர் அமைப்பு கொழும்பை தலைமையமாக் கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் போன்ற நாடாளாவிய அமைப்புக்களும் பிராந்திய மற்றும் நாடாளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் அம்பாறை சைவநெறிக்கூடம் மட்டக்களப்பு சிவதொண்டர் கூட்டம் கல்முனை சைவ அறப்பணி நிலையம் ஆகிய மாவட்டநிலை சைவ அமைப்புக்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவசமயிகளின் தலைமையாக ஏற்க தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டு இருந்தன.

அதே நேரம் கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையமாக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்கும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது அதே போல வெற்றிடமாகவுள்ள நல்லை குருமகா சந்நிதான அருளாட்சியை ஏற்று வீற்றிருக்க தவத்திரு அக்த்தியர் அடிகளாருக்கு அனேக சைவ சமய அமைப்புக்களும் நல்லை ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபையும் விடுத்த விண்ணப்த்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதனை நல்ல ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபை விரைந்து அதனை செயற்படுத்த வேண்டும் என இணைய அமைப்புக்கள் வலியுறுத்தின.
திருக்கோவில்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் பக்தர்களிற்கும் அயற் பிரதேச குடிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதீத ஒலி ஒளி நிகழ்வு செயற்பாடுகளும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
அனைத்து ஆலயங்களும் அறப்பணி
அனைத்து ஆலயங்களும் அறப்பணிக்களை சைவ சமயக் குடிகளிற்கு ஆற்ற நயினை நாகபூசணி வவுனியா சிவன் இலண்டன் கனதுர்க்கை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்தப்பட்டது

22வது அரசியலமைப்பு உட்பட எதிர்வரும் அரசியல் அமைப்பு யாப்பு சீரதிருத்தங்களில் சைவசமயிகளின் அபிலாசைகளை சரிவர சட்ட ரீதியாக சைவசமய தலைமைப்பீடத்தினால் அரசிற்கு வெளிப்படுத்தும் வகையில் திருக்கோணேசுவர ஆலய தலைவர் சட்டத்தரணி துசியந்தன் அவர்களை இணைப்பாளராகக்கொண்டு ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது
இதில் ஏற்கனவே மூத்த சட்டதரணிகளான இரட்ணவேல் ஜெயரூபன் தயாபரன் ஆகியோரும் முன்னாள் தமிழ் கூட்டமைப்பு சைவ சமய விவாகாரங்களிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் அவர்களும் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது வவுனியா சிவன் கோவிலின் மாகேசுவர பூசையுடன் பயனுறுதி வாய்ந்த கலந்துரையாகல்கள் ஏகமனதாக தீர்மானத்துடனும் கொள்கை பிரகடனத்துடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
