மன்னார் காற்றாலை விவகாரம் : ஜனாதிபதியுடன் சந்திப்பு
Mannar
Anura Kumara Dissanayaka
By Sumithiran
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்