யாழில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை..! 23 வயது இளைஞன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறை காவல்துறை புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, உந்துருளி மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
3 கிராம் ஹெரோயின் போதை
சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பட்டது என்று காவல்துறையினர் கூறினர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றயவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி