விசர் நாய்கடி நோயாளர்கள் போல கூச்சலிடும் எதிர்தரப்பினர்! கடுமையாக சாடிய நஜித் இந்திக
நாடாளுமன்றத்தில் தற்போது விசர் நாய் கடித்தது போல சில உறுப்பினர்கள் கத்தி கூச்சலிடுகின்றனர் என ஆளும் கட்சி உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
விசர் நாய்க்கடி நோய் எதிர்ப்பு குறித்த பிரேரணை தொடர்பில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''விசர் நாய்க்கடி என்பதை புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தையில் சொன்னால், பித்துபிடித்த நாய் என கூறலாம்.
மாற்றமடையும் செயற்பாடுகள்
இது ஏனைய கால்நடைகளுக்கும் பரவலாம். நரம்பு மண்டலத்தின் மூலமாகவே இந்த வைரஸ் பரவக்கூடும்.

பாதிப்புக்கு உள்ளன பிறகு நரம்பு மண்டல பாதிப்பால் கட்டுபடுத்த முடியாத அளவில் அதன் செயற்பாடுகள் மாற்றமடையும். விலங்குகளும் அப்படித்தான், மனிதர்களும் அப்படித்தான். அசாதாரண நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
இது குறித்த பிரச்சினையை சபையில் பேசும்போதும் சிலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போல கத்துகின்றனர்.
விசர் நாய்களுடன் மோதுவதற்கு எமக்கு முடியாமல் உள்ளது. சபையில் நங்கள் உரையாற்ற சந்தர்ப்பம் வேண்டும்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |