ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் பேசும் வாய்ப்பை அண்மையில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகளில் பொதுவாக ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பும் ஒருவருக்கு ஒன்றரை நிமிடங்கள் பேசுவதற்கு வழங்கப்படும்.
இதற்கமைய அமர்வுகளில் ஹெக்டர் அப்புஹாமிக்கு பேசுவதற்கு 45 வது இடம் வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு
ஆனால் நாள் முடிவில் அவர் அமர்வுகளில் பேச நேரம் வழங்கப்படவில்லை.
இதனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு குறித்த விவகாரத்தை விரைவில் எடுத்து செல்லவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய பிரச்சினையை எழுப்ப இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,தாங்கள் தங்கள், சொந்த பணத்தை சுற்றுப்பயணத்திற்காக செலவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா குறிப்பிட்டுள்ளார்.