உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கிட்டு உட்பட பத்துபேரின் நினைவேந்தல் நிகழ்வு
வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது
நேற்றைய தினம்(16.01.2026) காலை வேளை தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கின்ற மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் தலைவர் தலைமையில் இடம் பெற்றது
மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு
வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் கரைச்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழு நிர்வாகத்தினர், பொதுமக்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மரக்கன்றுகளும் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













