ஓய்வு குறித்து அறிவித்தார் லயனல் மெஸ்ஸி!
பிபா உலக கிண்ண கால்பந்து திருவிழா கத்தாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிபா உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ஒவ்வொன்றும் பல எதிர்பார்க்காத மாற்றங்களையும், திருப்பங்களையும் ஒவ்வொரு போட்டிகளின் இறுதித்தருணம் வரை தந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்த உலககிண்ணத்துடன் பல கால்பந்து ஜாம்பவான்களின் ஓய்வுகள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஆர்ஜென்டினா அணியினுடைய நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா
உலக கிண்ண கால்பந்து போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதலாவது அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதி இருந்ததுடன், இதில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
லயனல் மெஸ்ஸியின் ஓய்வு
இந்தநிலையில் ஆர்ஜென்டினா அணிக்காக விளையாடும் உலக கால்பந்து ஜாம்பவானும், ஆர்ஜென்டினா அணியினுடைய நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியுடன் தான் ஒய்வு பெற எண்ணியுள்ளதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
பல உலக கிண்ண மற்றும் உதைபந்தாட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரரான மெஸ்ஸியின் ஓய்வு என்பது முழு உலக உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும், ஆர்ஜென்டினா அணிக்கும், ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமையும் என கூறப்படுகிறது.
