பலத்த காற்று: யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (10) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (11) காலை 10.30 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60–70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, திருகோணமலை முதல் முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும் பெத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணிக்கு 50–60 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
இதனால், மறு அறிவிப்பு வரும் வரை கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினர் குறித்த கடல் பகுதிகளில் கப்பல் பயணம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்